ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலை... ரூ.25,000/- சம்பளம் - விவரங்கள் இங்கே

விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் வேலை... ரூ.25,000/- சம்பளம் - விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ZSI Recruitment 2022 : இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள PROJECT FELLOWS (RESERCH BIOLOGISTS) பணிக்கு 03 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள PROJECT FELLOWS (RESERCH BIOLOGISTS) பணிக்கு 03 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 20/05/2022ம் தேதி வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க 10/06/2022ம் தேதி கடைசி தேதி. அதற்குள் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதற்கான தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்துத் தெரிந்த பின்னர் மெயில் மூலமாக உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://zsi.gov.in/App/index.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவன வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண்LTEO-ZSI/01/2022
நிறுவனம் / துறைZoological Survey of India (ZSI) – இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம்
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலை
பணியிட விவரம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.
பணிPROJECT FELLOWS (RESERCH BIOLOGISTS)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி20/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி10/06/2022
சம்பள விவரம்ரூ.25,000/-
கல்வித் தகுதி விவரம்M.Sc. in Zoology/ Life Sciences/Ecology /Wildlife Biology/ Biodiversity பாடப்பிரிவில் 60% தேர்ச்சியுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
பிற தகுதிகள்Arthropod Ecology/Taxonomy பிரிவில் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 28 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்03 காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைE-mail மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
E-mail Idlteozsi@gmail.com
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ( No Application Fee)
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிZoological Surveey of India, Prani Vigyan Bhawan, M-Block, New Alipore Kolkata-700053 

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://zsi.gov.in/App/index.aspx–க்கு செல்லவும்.

 • ZSI Recruitment 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
 • ZSI Job Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
 • ZSI Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
 • தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
 • ZSI அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
 • நீங்கள் பயன்படுத்தும் மெயில் ஐடி மற்றும் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.
 • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.
 • உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

முக்கிய குறிப்பு :

1. விண்ணப்பப் படிவத்தை இந்திய விலங்கியல் ஆய்வு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் http://zsi.gov.in.

2. வழங்கப்பட்ட படிவத்தின் படி விண்ணப்பப் படிவம் MS Word வடிவத்தில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

மின்னஞ்சல் ஐடி : lteozsi@gmail.com

3.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வருவதற்கு மெயில் ஐடி மூலமாகவே அழைக்கப்படுவர்.

4. விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை MS Word மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களில் சமர்ப்பிக்க வேண்டும்

5. ஸ்கேன் செய்யப்பட்ட ( Educational qualifications, research experience, publications, proof for date of birth etc., along with copies of mark sheets of all examinations and ‘No Objection Certificate’ from present employer (if employed) அனைத்து ஆவணங்களையும் PDF முறையில் lteozsi@gmail.com இந்த மெயில் ஐடிக்கு Application for PROJECT FELLOW (RESEARCH BIOLOGIST)” by 10th June, 2022 என subject பகுதியில் வைத்து மெயில் அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://zsi.gov.in/App/index.aspx  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2022/19.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy