Home /News /employment /

2021 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட மற்றும் அதிக வாய்ப்புகள் அறிவிக்கப்பட்ட பணிகள்!

2021 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட மற்றும் அதிக வாய்ப்புகள் அறிவிக்கப்பட்ட பணிகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

மென்பொருள் என்ஜினியர் பணியில் 33% மற்றும் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ரோலில் 10 சதவீத வளர்ச்சியும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான வேலை அல்லது ஒரு குறிப்பிட்ட துறை மிகவும் பிரபலமாகும். இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவுக்கு மற்றும் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு, டீச்சிங் துறை, இளம் இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான வாய்ப்பாக மாறி இருக்கிறது. நாடு முழுவதுமே பேராசிரியர் பதவிக்காக எக்கச்சக்கமான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்றம் தளமான Indeed இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் அதிகம் தேடப்பட்ட பணிகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளன. அதன் படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, அதாவது டிசம்பர் 2020 முதல் டிசம்பர் 2021 வரையிலான ஒரு ஆண்டுக்குள் பேராசிரியர் பணிகள் 2440 சதவீதம் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

அதே போல, வேலை தேடுபவர்களிடையே பேராசரியர் பணிகளை தேடுபவர் எண்ணிக்கையும் 1576 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிகமாக தேடப்பட்ட வேலையாக மற்றும் அதிக ஜாப் ஓப்பனிங்க்ஸ் ஆக பகிரப்பட்ட பேராசரியர் பணியைத் தவிர்த்து, லோன் அதிகாரிகள், ரெக்ரூட்மெண்ட் மேனேஜர்கள் மற்றும் பேக்கஜர்கள் ஆகிய பணிகளுக்கு அதிக தேவை இருந்துள்ளது. BFSI பிரிவிலும், பொருளாதார மீட்பு நடவடிக்கை நல்ல பலன்களை அளித்துள்ளது காணப்படுகிறது. இதனால், பின்வரும் பணிகளுக்கான ஊழியர்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

கிரெடிட் மேனேஜர் ரோல் - 491 சதவீதம் அதிகரித்துள்ளது
லோன் அதிகாரி - 181 சதவீதம் அதிகரித்துள்ளது
பிரான்ச் மேனேஜர் - 186 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதைத் தவிர்த்து, தொழில்நுட்ப மூத்த மென்பொருள் என்ஜினியர் பணிகளில் 70 சதவிகிதம் புதிய வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், மென்பொருள் என்ஜினியர் பணியில் 33% மற்றும் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ரோலில் 10 சதவீத வளர்ச்சியும் கண்டறியப்பட்டுள்ளது. பேராசிரியர், நிதி மற்றும் மென்பொருள் துறைகளை தவிர்த்து கோவிட் தொற்று பாதிப்புக்குப் பிறகு, பின்வரும் வேலைகளில் பலரும் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளனர். அதையொட்டி, பின்வரும் வேலைவாய்ப்புகள் கணிசமான அளவில் அதிகரித்து, அதற்கேற்ற ஊழியர்களின் தேவையும் அதிகமாகி இருக்கிறது.

Also read... 2021ம் ஆண்டில் கூகுளை மிஞ்சிய டிக்-டாக் இணையதளம் - எப்படி இது சாத்தியமாகியது?

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - 715 சதவிகிதம் அதிகரித்துள்ளது
நிகழ்ச்சி வழங்குபவர் - 562 சதவிகிதம் அதிகரித்துள்ளது
டாக்ஸி ஓட்டுனர் - 499 சதவிகிதம் அதிகரித்துள்ளது
வாடிக்கையாளர் சேவை மேற்பார்வையாளர் - 470 சதவகிதம் அதிகரித்துள்ளது

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பின்வரும் வேலைவாய்ப்பு பணிகள் தேவை குறைந்துள்ளது.

ஆர்டர் பிராசசர் பணிகள் - 70 சதவிகிதம் குறைந்துள்ளது
கால் சென்டர் பிரதிநிதி – 61 சதவிகிதம் குறைந்துள்ளது
கலெக்சன் ஏஜென்ட் – 59 சதவிகிதம் குறைந்துள்ளது
மெஷின் ஆபரேட்டர் – 51 சதவிகிதம் குறைந்துள்ளது
வெல்டர் - 52 சதவிகிதம் குறைந்துள்ளது
பர்ச்சேஸ் உதவியாளர் - 75 சதவிகிதம் குறைந்துள்ளது
ஃப்ளோர் மேற்பார்வையாளர் - 71 சதவிகிதம் குறைந்துள்ளது
புராடக்ட் மேனேஜர் - 71 சதவிகிதம் குறைந்துள்ளது.

Also read... 2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!

தொழில்நுட்ப நிறுவனங்கள், 2020 அக்டோபர் மாதம் முதல் அக்டோபர் 2021 வரை மென்பொருள் பொறியாளர் மற்றும் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ஆகிய பணிகளுக்கு 30% அதிகமாக ஃபிரெஷர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. மும்பை ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய மூன்று நகரங்கள், வேலை தேடுபவர்களின் முதல் விருப்பமாக, அதிகமாக வேலை தேடப்பட்ட இடமாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நகரங்களாக சென்னை மட்டும் பூனே இருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: YearEnder 2021

அடுத்த செய்தி