Home /News /employment /

World Youth Skills Day 2022: இன்று சர்வதேச இளைஞர் திறன் தினம்

World Youth Skills Day 2022: இன்று சர்வதேச இளைஞர் திறன் தினம்

சர்வதேச இளைஞர் திறன் தினம்

சர்வதேச இளைஞர் திறன் தினம்

இந்தியத் தோலாளர்களில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  இன்று சர்வதேச இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது. தொழிற்திறன்கள் அடிப்படையிலான வேலைவாய்ப்பு,  சமுதாய முன்னேற்றம், கண்ணியத்தை உறுதி செய்தல் ஆகியவற்றைன் முக்கியத்துவத்தை பேசும் வகையில்  ஐநா சபை  ஒவ்வொரு ஆண்டிலும் ஜுலை 15ம் தேதியை சர்வதேச இளைஞர் திறன் தினமாக அறிவித்தது.

  இளைஞர்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) நிறுவனங்கள், தொழில் தருதருநர்கள், தொழிலாளர் அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு இடையேயான  உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் தனித்துவமான வாய்ப்பை இன்றைய தினம் வழங்குகிறது.

  உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ரஷ்யா-யுக்ரைன் போர் பதற்றம், காலநிலை மாற்றம், பாலின பாகுபாடு, தேசியவாதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, அதிகரித்து வரும் விலைவாசி, அதீத வறுமை தொழிலாளர் சந்தையை கடினத்தன்மையானதாக மாற்றியுள்ளது என்று ஐ.நா தெரிவிக்கிறது.

  இந்தியா போன்ற பல்வேறு சமுதாயா படிநிலை கொண்ட ஒரு  நாட்டில், திறன் என்பது சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இருந்து விளிம்பு நிலை மக்களை வெளியேற்றும் ஒரு வகையான ஆயுதமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக, தொழிற்படிப்புகள் மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாகஅறிமுகப்படுத்தும் என்ற எச்சரிக்கையும் கல்வியாளர்களிடம் இருந்து எழுகிறது.

  இதையும் வாசிக்க: Education Series 1: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

  திறன் இடைவெளி:

  நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 54% பேர் 25 வயதிற்கும், 65% பேர் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர்.ஆனால், இந்த பாரிய நன்மைகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், 2040க்குப் பிறகு நாடு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

  உதாரணமாக,  12-ஆம் ஐந்தாண்டுத் திட்டம் (2012-17)  இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று மதிப்பிடுகிறது. இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 56%  என்றும், ஜெர்மனியில் 75% என்றும், தென் கொரியாவில் 96% என்றும் மதிப்பிடப்படுகிறிது.

  இதனை சரிசெய்யும் விதமாக, கடந்த 2015ம் ஆண்டு ஜுலை 15ம் தேதி திறன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்களை நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் திறக்கவும், ஐடிஐ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், திறன் இந்தியா திட்டம் வழிவகுத்தது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:   Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

  மேலும், தொழிற்கல்வியை முதன்மை நீரோட்டத்துடன் இணைக்கும் முயற்சியை புதிய தேசிய கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. 2025 அளவில் பள்ளி மற்றும் உயர்கல்வி அமைப்புமுறை வாயிலாகக் கற்பவர்களில் 50% பேர் செய்த்தொழில் கல்வியை பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கை அது முன்வைக்கிறது. 8 மற்றும் 10ம்  வகுப்புகளில் தோல்வியுற்றவர்கள் தான் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பார்கள், முதன்மைக் கல்வியோடு அது மிகவும் தாழ்ந்தது என்ற தவறான பொது முத்தியை மாற்ற வேண்டிய அவசியத்தையும் புதியக் கல்விக் கொள்கை பேசுகிறது.

  மேலும், தொழிற் பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வியில் சேர்வதற்கான  பாதையை எளிதாக்கும் விதமான முன்னடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  முன்னதாக, சில பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று ஏஐசிடிஐ முன்னதாக அறிவித்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், வேளாண் பொறியியல், பயோ டெக்னாலஜி, என்ஜினியரிங் கிராபிக்ஸ், தொழிற்திறன், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் மூன்றில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று அறிவித்தது.

  இதையும் வாசிக்க:  இந்திய பொருளாதாரம் உயர்கல்வியை ஏற்றுக் கொள்கிறதா?

  அதேபோன்று,  நாட்டில் செய்தொழில் கல்வியை (Vocational Education) உயர்கல்வியோடு (Mainstream Higher Education) ஒன்றிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் செய்திறன்கள் தகுதிநிலை சட்டகம் மற்றும் தேசிய உயர்கல்வி தகுதிநிலை சட்டகத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (Unified Credit Framework National Higher Equation Qualification Framework (NHEQF) and National Skill Qualification Framework (NSQF) வெளியிட்டது.
  Published by:Salanraj R
  First published:

  Tags: Employment, Unemployment

  அடுத்த செய்தி