Women-led Enterprises: கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய சூழலில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக, கொரோனா பொது முடக்கத்தின் போது அறிவிக்கப்பட்ட தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது.
அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் கோடி பிணை இல்லாத கடன்கள்;எம்எஸ்எம்இ தன்னிறைவு இந்தியா நிதி மூலம் ரூ.50,000 கோடி பங்கு முதலீடு அளித்தல்; எம்எஸ்எம்இ-க்களுக்கான புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறை; ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலக டெண்டர்கள் கிடையாது; எளிதாக தொழில் நடத்தும் வகையில் எம்எஸ்எம்இ-க்களுக்கான உதயம் பதிவு ஆகிய முன்முயற்சிகள் இதில் அடங்கும்.
இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
2020-21-ம் ஆண்டில் 4.9 லட்சம் பெண்கள் தலைமையிலான (Women- owned MSME enterprises) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்திருந்த நிலையில், 2021-22-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 8.59 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2020ல் பெண்கள் பங்களிக்கும் எண்ணிக்கை 70,551 ஆகவும், 2021ல் 1,27,404 ஆகவும், 2022ல் 1,23,490 ஆகவும் அதிகரித்துள்ளன. இருப்பினும், இதில் 99%க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களாகவே உள்ளன. நடுத்தர நிறுவனங்கள் வரிசையில், 2020ல் 140, 2021ல் 33, 2022ல் 31 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
திட்டங்கள்:
முத்ரா கடன் (Mudra loan Scheme), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (Prime Minister Employment generation scheme) போன்ற மத்திய அரசின் கடன் அளிக்கும் திட்டங்களிலும் பெண்கள் அதிகமாக பயனடைந்து வருவதும் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இதையும் வாசிக்க: இலவச பயிற்சி.. கைநிறைய சம்பளம்.. முழு விவரம் இங்கே!
உதாரணமாக, முத்ரா திட்டத்தின் கீழ் பெண்கள் வைத்திருக்கும் கணக்குகளின் எண்ணிக்கை மட்டும் 68% ஆக உள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில் 44% பெண்கள் கணக்கிற்கே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தில் பெண்கள் சிறப்பு பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 35% வரை மானியமாக வழங்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: தாட்கோ SEPY திட்டம்: நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்... திட்டமிட்டே வங்கிகள் புறக்கணிக்கிறதா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship