• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • 17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கும் விப்ரோ நிறுவனம்!

17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கும் விப்ரோ நிறுவனம்!

Wipro

Wipro

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜதின் தலால், அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் விப்ரோ நிறுவனத்தில் நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

  • Share this:
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அனுபவமற்ற 17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது பெங்களூரை தலைமையிடமாக் கொண்டு இயங்கி வரும் விப்ரோ. இதனிடையே 2022ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிதி இலக்குகளை கடந்து விப்ரோ நிறுவனம் பயணித்து வருவதால் ஏற்கனவே 10,000 அனுபவமற்றவர்களை (ஃப்ரெஷர்கள்) பணியமர்த்த திட்டமிட்டிருந்த விப்ரோ, தற்போது 16,000 முதல் 17,000 ஃபிரெஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜதின் தலால், மணிகண்ட்ரோல் தளத்துக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் விப்ரோ நிறுவனத்தில் நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.

ஜதின் தலால் பேசுகையில், “விப்ரோ நிறுவனம் வருடாந்திர நிதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மைல்கல்லை வெற்றிகரமாக கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 12 மாதங்களில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவன நிதிவருவாயை நெருங்கியிருக்கிறது. விரைவில் ஹெச்.சி.எல் நிறுவனத்தை கடந்து இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை அளிக்கும் நிறுவனமாக விப்ரோ உயர இருக்கிறது.

Also Read: மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் – முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

விப்ரோ நிறுவன தலைமை செயல் அதிகாரியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற தியரி டெலாபோர்ட், வியக்கத்தக்க பல மாற்றங்களை நிறுவனத்தில் செய்தார். நிறுவனத்துக்கு பெரிய ப்ராஜெக்ட்கள் கொண்டு வந்தது, திறமையாளர்களை பணியமர்த்தியது என அவரின் நடவடிக்கைகளினால் நிறுவனத்தின் வருவாய் 6.9% அளவுக்கு உயர்ந்தது. மேலும் தற்போது விப்ரோவிடம் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கான காண்ட்ராக்ட் கிடைத்திருக்கிறது.

விப்ரோவில் பல புதியவர்கள் பணியமர்த்தப் பட இருக்கின்றனர். ஏற்கனவே 10,000 ஃபிரெஷர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 16,000 முதல் 17,000 ஃபிரெஷர்களை பணியமர்த்த முடிவெடுத்திருப்பதாகவும் ஜதின் தலால் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: