Wipro job Notification: நாட்டின் முன்னணி தகவல் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான விப்ரோ இந்தாண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் மூலம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பனியின் பெயர் |
கல்வித் தகுதி |
Graduate Engineer Trainee |
தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
Service Desk Analyst |
எந்த துறையை சார்ந்த பொறியியல் பட்டதாரிகளும் இதற்கு விண்ணபிக்கலாம் |
Developer |
கணினி அறிவியல் அல்லது அதுதொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்படப் படவில்லை.
https://www.Wipro.com எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
விப்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.Wipro.com-ல் 'Career' எனும் தலைப்பை காணவும்.
ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
வேலைவாய்ப்பு அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாட்டின் சேவைத் துறைகள் (ஐடி ) வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கிறது. உதரணமாக, 2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்தது) 57.03 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகமாகும்.
மேலும், இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, அனுபவமிக்க விண்ணப்பதாரர்களை விட, புதியவர்களை பணியமர்த்துவதில் விப்ரோ,டிசிஸ், சிடிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் புதியவர்களை பணியமர்த்தும் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தை விட 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் ஆர்வமுடன் உழைத்தால் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களில் பணியில் சேர முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.