படித்தவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வேலை - சத்தமின்றி உதவும் விஜய்சேதுபதி!

news18
Updated: August 5, 2019, 7:30 PM IST
படித்தவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வேலை - சத்தமின்றி உதவும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி
news18
Updated: August 5, 2019, 7:30 PM IST
வேலைதேடுபவர்களுக்கு உதவும் வகையில் வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு நடிகர் விஜய்சேதுபதி ஆதரவளித்துள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்களும் ஏராளம். எதார்த்தமான நடிப்பு மட்டுமின்றி வெளிப்படையான நடவடிக்கைகளால் மக்கள் மனதில் இடம்பிடித்த விஜய் சேதுபதி, பல்வேறு உதவிகளையும் சத்தமின்றி செய்து வருகிறார். அந்த வகையில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்துக்கும் தனது ஆதரவை அளித்துள்ளார்.

வேலை தேடுவோர் இந்த வாட்ஸ் அப் குழுவில் தங்களை இணைத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு செய்திகளை வாட்ஸ் அப் செயலி வாயிலாக பெறலாம். இத்தகவலை யூடியூப் வீடியோவாக வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். அதை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.


இதுவரை 12,000-க்கும் அதிகமானோருக்கு வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இந்த வேலைவாய்ப்பு சேவை இயக்கம் வாட்ஸ் அப் வாயிலாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடியோ பார்க்க: விஜய் சேதுபதியை புகழ்ந்த அதீதி ராவ்!

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...