ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் பசுமை வேலை வாய்ப்புகள் - பசுமை வேலை என்றால் என்ன?

ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் பசுமை வேலை வாய்ப்புகள் - பசுமை வேலை என்றால் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) மார்க்கெட்டில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த துறையில் தற்போது வரை உருவாகி இருக்கும் பெரும்பாலான வேலைகள் சில நாடுகளில் மட்டுமே உள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) மார்க்கெட்டில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த துறையில் தற்போது வரை உருவாகி இருக்கும் பெரும்பாலான வேலைகள் சில நாடுகளில் மட்டுமே உள்ளன.

  இதனிடையே கிரீன் ஜாப்ஸ் (Green jobs) எனப்படும் பசுமை வேலைகள் விஷயத்தில், உலகின் சக்திவாய்ந்த மற்றும் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா தோளோடு தோளாக நின்று செயல்பட்டு வருகிறது. இதற்கு சான்று ஒரேஆண்டில் ம் 8.63 லட்சம் பேருக்கு நாட்டில் பசுமை வேலை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கு தகவல். இந்தியாவை தவிர சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகள் பசுமை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பசுமை வேலை என்றால் என்ன, இதன் கீழ் எந்தெந்த துறைகளில் வேலைகள் வழங்கப்படுகின்றன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

  பசுமை வேலை என்றால் என்ன.?

  பசுமை வேலைகள் என்பது பூமியில் நேரடியாக நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் நலனுக்கு பங்களிக்கும் வேலைகளின் தொகுப்பை குறிக்கிறது. சூரிய ஆற்றல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மின்சாரம் போன்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் துறைகளில் உருவாக்கப்படும் வேலைகள் பசுமை வேலைகள் என குறிப்பிடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அல்லது மீட்டெடுக்க பங்களிக்கும் வேலைகளாக இவை இருக்கின்றன.

  பசுமை வேலைகளுக்கு உதாரணம்:

  விவசாயம் என்றால் ஆர்கானிக் வேளாண்மை வேலைகள், விவசாய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாய மேலாளர்கள் உள்ளிட்டவை அடங்கும். அதுவே ஆற்றல் என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆபரேட்டர்கள், சோலார் பேனல் நிறுவுதல், காற்றாலை பொறியாளர்கள் மற்றும் அணுசக்தி பொறியாளர்கள் போன்ற வேலைகள் அடங்கும்.

  அறிக்கையில் வெளியான தகவல்...

  'புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் வேலைகள் - ஆண்டு ஆய்வு 2022' என்ற தலைப்பில் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட கூட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி,

  இந்தியாவில் 2020-21 ஆம் ஆண்டில் 8,63,000 பசுமை வேலைகள் உருவாக்கப்பட்டன என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல கடந்த 2020-21-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் மொத்தம் 1 கோடியே 27 லட்சம் பசுமை வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆசிய நாடுகளின் பங்கு, 63.6%. இதில் சீனாவில் தான் அதிக வேலை வாய்ப்புகள் (54 லட்சம்)உள்ளன. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பசுமைத் துறையில் 34 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  எந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன..?

  உலகெங்கிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் உருவாக்கப்படும் அனைத்து வேலைகளிலும் சோலார் ஃபோட்டோவோல்டாயிக் (Solar Photovoltaic) வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் துறையாகவும் உள்ளது. இதற்கடுத்து வின்ட் எனர்ஜி , ஹைட்ரோ பவர் மற்றும் பயோஎனர்ஜி துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

  வருடாந்திர மதிப்பாய்வு 2022 அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் சோலார் ஃபோட்டோவோல்டாயிக் வெர்டிகல் (சோலார் எனர்ஜி) துறையில் 2.17 லட்சம் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

  Read More: தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!

  காற்றாலை ஆற்றல் துறையில் இந்தியா 2020-2021ல் முன்னணியில் இருந்தது. ஹைட்ரோபவர் என்று வரும் போது, ​​உலகளவில் திறன் 25 GW-ஆக இருந்தது. இதில் சீனா மட்டும் கிட்டத்தட்ட 21-GW-ஐ உற்பத்தி செய்தது. கனடா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவை தலா 1 ஜிகாவாட் மற்றும் ஐரோப்பிய நாடுகள் 1.5 ஜிகாவாட் உற்பத்தி செய்தன. அதே போல உலகளாவிய ஹைட்ரோபவர் வேலைவாய்ப்பில் இந்தியா 18% கொண்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து பிரேசில், வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Job, Job search