முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC Group 4: எப்ப சார் ரிசல்ட் வரும்.. ஏக்கத்தில் தேர்வர்கள் - டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்...!

TNPSC Group 4: எப்ப சார் ரிசல்ட் வரும்.. ஏக்கத்தில் தேர்வர்கள் - டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்...!

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

WeWantGroup4Results : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகளை உடனே வெளியிடக்கோரி ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 முடிவுகளை 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதமாகும் நிலையில் உடனே முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் அக்டோபர் மாதமே வெளியாக வேண்டிய முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதம் ஆகிக்கொண்டு இருக்கிறது. சுமார் 18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதி காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், லட்சக்கணக்கான தேர்வர்கள் சமூக வலைத்தளமான ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிடுக  என பதிவிட்டு வருகின்றனர்.  அதேபோல் #WeWantGroup4Results என்ற  ஹேஷ்டேக்கில் ரிசல்ட் தொடர்பாக தேர்வாணையத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில்  #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.

First published:

Tags: Group 4, TNPSC, Trending, Twitter