ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஐடிஐ மதிப்பெண்கள் போதும்; மேற்கு ரயில்வே பிரிவில் 3612 காலியிடங்கள்

ஐடிஐ மதிப்பெண்கள் போதும்; மேற்கு ரயில்வே பிரிவில் 3612 காலியிடங்கள்

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி www.rrc-wr.com.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ரயில்வேயில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட 18 தொழிற்பணிகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான  ஆட்சேர்ப்பு அறிவிப்பை மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Westen Railway - Railway Recruitment cell)  வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், எந்தவித தேர்வுஇன்றி 3612 தொழிற் பழகுனர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

காலியிடங்கள்:  3612

வயதுக்கான தகுதி:  விண்ணப்பிக்க விரும்புவோர் 27/06/2022 அன்று  15  வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது  பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

கல்விக்கான தகுதி:  50% மதிப்பெண்களுடன் 10ம்  வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து  தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

நியமனத்தில் இடஒதுக்கீட்டுப் முறை பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.        

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை:  10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.  எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது  விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு.

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி www.rrc-wr.com.  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 27/06/2022 மாலை 05 மணி வரை. விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாமாகும்.

கூடுதல் தகவல்:

இந்திய ரயில்வே துறையில்,  2017 முதல் 1-ம் மட்ட பணியிடங்களில், கணினி அடிப்படையிலான, தேசிய அளவிலான பொதுத்தேர்வு மூலம் அனைத்து பணி நியமனங்களும் நடைபெறுகிறது.

ரயில்வே நிறுவனங்களில் பழகுனர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு , குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள், மருத்துவ தரத்துக்கு உட்பட்டு, பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

western railway recruitment cell invites application for the post of apprentices 3612 vacancies

First published:

Tags: Indian Railways