அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வேண்டுமா? சென்னையில் அக். 31-ல் நேர்காணல்

18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை நேர்காணலில் பங்கேற்கலாம்.

news18
Updated: October 27, 2018, 6:42 PM IST
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வேண்டுமா? சென்னையில் அக். 31-ல் நேர்காணல்
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவராக வாய்ப்பு
news18
Updated: October 27, 2018, 6:42 PM IST
அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவர்களை நியமிக்க சென்னையில் அக்டோபர் 31-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களை நியமிக்க சென்னையில் அக்டோபர் 31-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.

யார் யார் பங்கேற்கலாம்? வேலைவாய்ப்பு அற்றோர், சுயதொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீடு ஆலோகராகப் பணிபுரியும் முன் அனுபவம் உள்ளவர்கள், காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் (மற்ற காப்பீடு நிறுவனங்களில் தற்போது காப்பீடு முகவர்களாகப் பணிபுரிபவர்கள் தவிர) இந்த நேர்காணலில் பங்கேற்கலாம்.

கல்வித் தகுதி: அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவராக விரும்புவோர் 5,000-க்கும் குறைவான மக்கள்தொகை உள்ள பகுதியில் வசிப்போர் எனில் 10-ம் வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12-ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை நேர்காணலில் பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: இந்த நேர்காணல் எண் 3 மற்றும் 4, டிபிஐ வளாகம், எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை கோட்ட அலுவலகத்தில் அக்டோபர் 31 காலை 10 மணிக்கு தொடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது சுயவிவரம், வயது, கல்வித் தகுதி, அனுபவ  சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
First published: October 27, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...