தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் DBT ATGC கீழ் செயல்படும் திட்டத்தில் பணிபுரிய Project Associate II மற்றும் Skilled labour பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகள் தற்காலிக அடிப்படையில் இரண்டு வருடக் காலத்திற்கு பணிபுரிய நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Project Associate II | 1 | ரூ.43,400 |
Skilled labour | 1 | ரூ.12,240 |
கல்வித்தகுதி:
Project Associate பணிக்கு Microbiology/ Animal Biotechnology/Biotechnology/MVSc/Medicine பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட அனுபவம் தேவை
Skilled labour பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். 3 வருட அனுபவம் தேவை.
Also Read : எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை... ரயில்வே துறையில் 1,785 காலியிடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேர்காணலுக்குச் செல்லாம். விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் இடம் & நாள் :
Department of Veterinary
Parasitology, Madras Veterinary College,
Chennai-600 007. நாள்: 30.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment news, Jobs, University