• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மேனேஜர் வேலை ... ரூ.60,000/- வரை சம்பளம்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மேனேஜர் வேலை ... ரூ.60,000/- வரை சம்பளம்

  தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் (VOC Port Trust )

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் (VOC Port Trust )

விண்ணப்பிக்கும் நபர்கள் 22.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.  2011ம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.

    இந்த துறைமுகத்தில் தற்போது Manager பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் 22.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

     

     

    வேலைக்கான விவரங்கள் :



































































    நிறுவனம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் (VOC Port Trust )
    வேலையின் பெயர் Manager
    காலிப்பணி இடங்கள் 01 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் தூத்துக்குடி - தமிழ்நாடு (Thoothukudi – Tamilnadu )
    வேலை வகை தமிழக அரசு வேலை ( TN Govt Jobs )
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல்
    வயது அதிகபட்சமாக 40 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் Degree in Law பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    முன் அனுபவம் பணியில் முன் அனுபவமிருக்க வேண்டியது அவசியம்.
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin -628 004
    இணையதள முகவரி https://www.vocport.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Advertisement.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்

    • https://www.vocport.gov.in/

    • பின்னர் Career / Recruitment இணையப் பக்கத்தைக் கண்டறியவும்.

    • https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Advertisement.pdf

    • அதிகாரபூர்வ அறிவிப்பினை க்ளிக் செய்யவும்.

    • அறிவிப்பினை படித்த பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

    • இறுதியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்கள் சேர்த்து உங்கள் விண்ணப்பத்தை அனுப்பவும்.


    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin -628 004.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: