முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை... பெண்களுக்கான அரிய வாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை... பெண்களுக்கான அரிய வாய்ப்பு

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Virudhunagar District Job alerts: இவ்வேலைவாய்ப்பு முகாமில்,  12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்  

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில்,  12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தேதி மற்றும் இடம்: சூலக்கரை, ஐஐடி வளாகத்தில்  வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022), காலை 10 மணி முதல் நடைபெறும்.

இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் தேர்வுக்கான சிலபஸ் என்ன... எப்படி தயாராகுவது?

வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்

டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு

படிப்பு: 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி

துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்

பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்

தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து" நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கமத்திய அரசில் 24,369 காவலர் பணியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

First published:

Tags: Tamil Nadu Government Jobs