ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

Virudhunagar Distrct Job alerts: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Virudhunagar |

  விருதுநகர் மாவட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் (TamilNadu State Rural Livelihood Mission ), வட்டார இயக்க மேலாண்மை  (Block Mission Management)அலகுகளில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் (Unit Block Mission Manager) மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பெண்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலியிடங்கள்: 

  பதவியின் பெயர்வட்டார இயக்க மேலாளர்வட்டார ஒருங்கிணைப்பாளர்
  தொகுப்பு ஊதியம்ரூ. 15,000ரூ. 12,000
  வயது1.07.2022 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்1.07.2022 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  காலியிடங்கள்218
  கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சிMS Office-ல் குறைந்தது 6 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.Computer Science அல்லது Computer Applications பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சிMS Office-ல் குறைந்தது 6 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.Computer Science அல்லது Computer Applications பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  முன் அனுபவம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
  வசிப்பிடம்விருதுநகர் மாவட்டத்திற்கு  உட்பட்டவராக இருத்தல் வேண்டும்விருதுநகர் மாவட்டத்திற்கு  உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
  தெரிவு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுஎழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

  விண்ணப்பம் செய்வது எப்படி?

  விண்ணப்பபடிவத்தை virudhuangar.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

  1) விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

  2. மேலும், விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிந்ததற்கு பணி அனுபவ சான்று, கல்வித்தகுதி, சாதி சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல்(Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

  3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  4) எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

  இதையும் வாசிக்கஎழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ரூ.62,000 மாத சம்பளத்தில் அரசு வேலை!

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரில் வந்து தரலாம்.

  அல்லது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய முகவரி,

  இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,

  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,

  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

  ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர் அஞ்சல் -626002,

  விருதுநகர் மாவட்டம்

  என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 10.11.2022 (வியாழக்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment, Tamil Nadu Government Jobs, Virudhunagar