ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பணம் கொடுத்தால் பதவியா? கிராம உதவியாளர் தேர்வில் ஊழல், முறைகேடுகளுக்கு வாய்ப்பு உண்டா?

பணம் கொடுத்தால் பதவியா? கிராம உதவியாளர் தேர்வில் ஊழல், முறைகேடுகளுக்கு வாய்ப்பு உண்டா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

post of village assistant: நேர்காணல் தேர்வுக்கு உயர் அளவாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஊழல், லஞ்சம், மோசடிகள் போன்றவற்றை ஏற்கக் கூடாது என்பதற்காகவே நேர்காணல் தேர்வுக்கு குறையவான வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2748 கிராம உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்த சில சந்தேகங்களும்  எழுப்பப்பட்டு வருகிறது.  மேலும், இது போன்ற அரசுப் பணிகளில் ஊழல் என்பது மக்களின் உரிமையை நேரடியாக பாதிக்கிறது. எனவே, இந்த நியமனங்களின் நடைமுறை என்ன, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறதா என்பது குறித்து இங்கே பாப்போம்.     

   எதனடிப்படையில் தேர்வு முறை இருக்கும்?

  திறனறிதல் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

  மதிப்பெண்கள் ஒதுக்கீடு:  

  விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதிக்கு உயர்அளவாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்

  கல்வித் தகுதிமதிப்பெண்கள்
  9ம் வகுப்பு வரை தேர்ச்சி5
  12ம் வகுப்பு/டிப்ளமோ/ஐடிஐ தேர்ச்சி7
  இதர உயர்கல்வி பிமேற்படிப்புகளுக்கு10

  வண்டி ஓட்டும் திறன்:  உயர் அளவாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  மிதிவண்டி ஓட்டும் திறன்5 மதிப்பெண்
  இரண்டு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால்7 மதிப்பெண்
  நான்கு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால்10 மதிப்பெண்

  எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன்: உயர் அளவாக 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  வாசித்தல் திறன் (எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்)10 மதிப்பெண்
  எழுத்து தேர்வு:   ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்30 மதிப்பெண்

  இருப்பிடம் : இதற்கு உயர் அளவாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் கிராம வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால்25
  விண்ணப்பிக்கும் தாலுகா வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால்20

  நேர்காணல் தேர்வு : உயர் அளவாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஊழல், லஞ்சம், மோசடிகள் போன்றவற்றை ஏற்கக் கூடாது என்பதற்காகவே நேர்காணல் தேர்வுக்கான உயர் அளவு மதிப்பெண் வெறும் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: 2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது...விண்ணப்பிப்பது எப்படி?

  தாலுகா அளவில், தாசில்தார், சிறப்பு தாசில்தார், ஏதேனும்  இணை தாசில்தார் என 3 அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நேர்காணல் தேர்வு நடைபெறும். மூன்று பேரும், தனித்தனியாக மதிப்பெண்  வழங்கி, அந்த மூன்றின் சராசரி மதிப்பெண்கள் மட்டுமே விண்ணப்பித்தாரர்களுக்கு அளிக்கப்படும். எந்தவித விதிமீறலும் இல்லாமல் இருப்பதாற்காக இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, சிலருக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்குவது, ஒருதலைபட்சமாக  செயல்படுவது ஓரளவுக்கு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் வாசிக்க: 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  மேலும், எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தெரிவு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் இணையத்தளத்தில் முழு விவரங்களுடன் வெளியிடப்படும். கிராம உதவியாளர் நியமனத்துக்கான விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

  எனவே, கிராம உதவியாளர் பணியை பணம் கொடுத்து வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதால், பணம் கேட்கும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment