விஜயா பேங்கில் அதிகாரியாக விருப்பமா? 330 காலியிடங்கள் அறிவிப்பு

news18
Updated: September 24, 2018, 7:57 PM IST
விஜயா பேங்கில் அதிகாரியாக விருப்பமா? 330 காலியிடங்கள் அறிவிப்பு
விஜயா பேங்கில் அதிகாரியாக வாய்ப்பு
news18
Updated: September 24, 2018, 7:57 PM IST
விஜயா வங்கியில் காலியாகவுள்ள 330 உதவி மேலாளர் (கிரெடிட் பிரிவு) பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.பி.ஏ. உடன் நிதி தொடர்பான டிப்ளமா படிப்பையும், முதுநிலை வணிகவியல், பொருளாதாரம், சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஜனவரி 1, 2018 நிலவரப்படி 21 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள்  உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பொது மற்றும் இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும்.

கடைசி தேதி: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 27. மேலும் விவரங்களுக்கு www.vijayabank.com என்ற வலைதளத்தை பார்க்கவும்.
First published: September 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...