ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக கால்நடை துறையில் 731 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழக கால்நடை துறையில் 731 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணி

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணி

TN job alert : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பிரிவில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான 731 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி- யின் இந்த புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

    டிஎன்பிஎஸ்சி அறிவித்த பணியின் விவரங்கள்:

    பணியின் பெயர்தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகள்
    பதவியின் பெயர்கால்நடை உதவி மருத்துவர்
    காலிப்பணியிடங்கள் 731
    சம்பளம்ரூ.56,100 - 2,05,700/-

    இப்பணிக்கு வயது வரம்பு :

    இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆ.தீ.,மி.பி.வ.,சீ.ம., பி.வ வகுப்புக்கு வயது வரம்பு கிடையாது.

    கல்வித்தகுதி:

    12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    இப்பணிக்குக் கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    Also Read : ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு : மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

    விண்ணப்பிக்கும் முறை:

    உதவி கால்நடை மருத்துவர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

    முக்கிய நாட்கள் :

    நிகழ்வுகள்தேதிகள்
    ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள்18.11.2022
    ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்17.12.2022
    இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம்22.12.2022 - 24.12.2022.
    கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்15.03.2022.

    மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Tamil Nadu Government Jobs, TNPSC