ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எல்லை பாதுகாப்புப் படையில் ரூ. 1,77,500 வரை சம்பளத்தில் வேலை : ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

எல்லை பாதுகாப்புப் படையில் ரூ. 1,77,500 வரை சம்பளத்தில் வேலை : ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

எல்லை பாதுகாப்புப் படை

எல்லை பாதுகாப்புப் படை

Border Security Force Recruitment : எல்லை பாதுகாப்புப் படையில் மருத்துவ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்புப் படை பொது இயக்குநரகத்தில் கால்நடை மருத்தும் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Veterinary Assistant Surgeon2023-30ரூ.56,100 - 1,77,500 வரை.

கல்வித்தகுதி:

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்படுவர். முதல் நிலையில் மூன்று பிரிவுகள் உண்டு.

முதல் நிலை: முதலில் விண்ணப்பதார்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும். இரண்டிலும் தேர்வானவர்களுக்கு உடல் திறன் சோதனை நடத்தப்படும்.

இரண்டாம் நிலை: முதல் நிலையில் தேர்வானவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மூன்றாம் நிலை: நேர்காணலில் தகுதி பெற்றவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர்.

Also Read : ரூ.1,42,400 வரை சம்பளம்.. மத்திய அரசு பாதுகாப்புத் துறை சார்ந்த வேலை.. முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை:

எல்லை பாதுகாப்புப் படையில் அதிகாரப்பூர்வத் தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.400/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://rectt.bsf.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Border Security Force, Central Government Jobs