வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடி திருந்துநர்(Barber), வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் (Night watchmen) ஆகிய பணியிடங்ககளுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். வேலூர் மத்திய சிறையில் இந்த தேர்வுகள் நடைபெறும். முடிதிருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்
வயது வரம்பு: பட்டியலின மக்கள்., பட்டியலின அருந்ததியர்., பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் 34 வயது வரையும், பொது பிரிவினர் 32 வயது வரையும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்
கல்வி, சாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20- ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.