ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாட்டில் அக்னிபத் சேர்க்கை முகாம்: இந்திய ராணுவம் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் அக்னிபத் சேர்க்கை முகாம்: இந்திய ராணுவம் முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் - இந்திய ராணுவம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Vellore |

  இந்திய ராணுவத்தில் அக்னிவீரர்  உள்ளிட்ட பணிகளுக்கான  ஆள்சேர்க்கை  முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பணியிடங்கள் விவரம் :  அக்னி வீரர் (ஆண்); அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்); சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர்/ கால்நடை செவிலியர் உதவியாளர்;  இளநிலை சேவை அதிகாரி (மத போதகர்) உள்ளிட்ட பணிகளுக்கு இந்த ஆட்டசேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது.

  முகாம் நடைபெறும் நாள்: நவம்பர் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை முகாம் நடைபெறும்.

  யார் கலந்து கொள்ளலாம்?  தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆவணங்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும்:  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வேலூர் ஆட்சேர்ப்பு  முகாம் குறித்த அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்) எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  முழுவதும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  மேலும் தெளிவுரை பெற ஆள்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) , புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சென்னை 600 009 என்ற முகவரியிலோ, 044 – 2567 4924 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Agnipath, Central Government Jobs