முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்டீல் அதாரிட்டி ஓஃப் இந்தியா

ஸ்டீல் அதாரிட்டி ஓஃப் இந்தியா

Central Govt job alert : மத்திய அரசின் முதன்மையான ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு சுரங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் முதன்மையான ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனமாக விளங்கும் ஸ்டீல் அதாரிட்டி ஓஃப் இந்தியா பல்வேறு இடங்களில் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலைகளை வைத்துள்ளது. பிலாய் ஸ்டீல் ஆலை,சந்திராபூர் ஃபெரோ அலாய் ஆலை மற்றும் சேலம் ஸ்டீல் அலை போன்ற இடங்களில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயது
Sr. Consultant (Cardiology)144
Sr. Consultant (Neurosurgery144
General Medicine241
Orthopaedics141
General Surgery241
Psychiatry141
ENT141
Transfusion Medicine141
Medical Officer534
Manager (Hydraulics -Maintenance & Utilities)235
Manager (Mechanical - PowerEngineering Maintenance)235
Manager (Mechanical - Bar &Rod Mill)135
Manager (Electrical - Bar & RodMill)135
Dy. Manager (Mining) - Rowghat Mines134
Dy. Manager (Geology) - Rowghat Mines132
Assistant Manager (BOE)1230
Assistant Manager (Safety)1030
Mines Foreman1628
Surveyor428
Operator cum Technician828
Mining Mate1728
Blaster1728
Operator cum Technician (BoilerOperation)4330
Attendant cum Technician (BoilerOperation)2328
Operator cum Technician (Trainee)2428
Attendant cum Technician (Trainee)5428
Fireman cum Fire Engine Driver (Trainee)828

கல்வித்தகுதி:

மருத்துவப் பணிகளுக்கு அந்தந்த பிரிவுக்கு ஏற்ற மருத்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலாளர் பணிக்கு வேலைக்கு ஏற்ற பிரிவில் BE/B.Tech முழு நேரப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 7 வருடப் பணி அனுபவம் வேண்டும். இணை மேலாளர் பணிக்கு முதுகலைப் பட்டம் அல்லது BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட அனுபவம் தேவை.

துணை மேலாளர் பணிக்கு BE/B.Tech மற்றும் இரண்டு வருட அனுபவம் தேவை.

Mines Foreman,Operator cum Technician (Electrical

Supervisor),Surveyor பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 1 வருட அனுபவம் தேவை.

Mining Mate மற்றும் Blaster பணிகளுக்குச் சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட அனுபவம் வேண்டும்.

Trainee பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

பதவியின் பிரிவுசம்பளம்
Sr. Consultantரூ.90,000-2,40,000/-
Consultant / Managerரூ.80,000-2,20,000/-
Sr. Medical Officer / Deputy Managerரூ.70,000-2,00,000/-
Medical Officer/Assistant Managerரூ.50,000-1,60,000/-
Mines Foreman / Surveyor /Operator cum Technician (ElectricalSupervisor) / Operator cum Technician(Boiler Operation) / Operator cumTechnician (T)ரூ.26,600-38,920/-
Mining Mate / Blaster / Attendant cumTechnician (Boiler Operation) /Attendant cum Technician (T) / Firemancum Fire Engine Driver (T)ரூ.25,070-35,070/-

தேர்வு செய்யப்படும் முறை:

Consultant பணிக்கு மட்டும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும். இதர பணிகளுக்கு எழுத்துத் தேர்வு அல்லது கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://sailcareers.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.700,ரூ.500 மற்றும் ரூ.300/- பணிகளுக்கு ஏற்ற கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/ESM பிரிவினர் ரூ.200,ரூ.150 மற்றும் ரூ.100/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Also Read : மத்திய அரசு நிறுவனத்தில் 10,12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..என்னென்ன பணிகள்?

முக்கிய நாட்கள் :

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்26.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்17.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs, SAIL