ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2,50,000 வரை சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.2,50,000 வரை சம்பளத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்

Central Govt job alert : மத்திய அரசின் NMDC லிமிட் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் இந்தியாவில் இரும்பு தாது உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்டீல் அமைச்சகத்தில் முக்கிய கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை இங்குத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
  Jt. Company Secretary1அதிகபட்சம் 45 வயதுரூ.1,00,000- 2,60,000/-
  Assistant General Manager (Law/Personnel)4அதிகபட்சம் 45 வயதுரூ.1,00,000- 2,60,000/-
  Junior Manager (Chemical/Environment/Rajbhasha)6அதிகபட்சம் 30 வயதுரூ.50,000-1,60,000/-

  கல்வித்தகுதி:

  பணியின் பெயர்தகுதிகள்
  Jt. Company SecretaryCS final தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆண்டு அனுபவம் தேவை.
  Assistant General Manager (Law/Personnel)சட்டப் பிரிவில் பட்டம் /Sociology/Social Work/Labour Welfare/PersonnelManagement/ IR /IRPM/HR/HRM முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA தேர்ச்சி.12 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  Junior Manager (Chemical/Environment/Rajbhasha)வேதியியல் பிரிவில் M.Sc அல்லது வேதியியல் என்ஜீனியர் தேர்ச்சி/Civil/Chemical/Mining/Environment Engineering/Environmental Science/Geology/ Chemistry/Botany பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்/ ஆங்கிலம் கலந்த ஹிந்தி மொழியில் முதுகலைப் பட்டம். 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் NMDC Limited அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST/PwBD/Ex-servicemen பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://jobapply.in/

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022.

  Also Read : மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 787 காலிப்பணியிடங்கள்..10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

  குறிப்பு :

  ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்துக் கொண்டு நேர்காணலுக்கு செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும்.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs