ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

காற்று தர மேலாண்மையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு... முழு விவரம் இதோ..!

காற்று தர மேலாண்மையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு... முழு விவரம் இதோ..!

காற்று தர மேலாண்மை

காற்று தர மேலாண்மை

Central Govt Job Alert : காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் ஆணையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதியதாகத் தொடங்கப்பட்ட நாட்டின் தலைநகர் பகுதி மற்றும் அதன் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் ஆணையத்தில் உள்ள பணியிடங்களை deputation basis முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Under Secretary3ரூ.67,000-2,08,700/-
Section Officer2ரூ.47,000-1,15,100/-
Assistant Section Officer6ரூ.44,900-1,42,400/-
Senior Principal Private Secretary1ரூ.78,800-2,09,200/-
Principal Private Secretary3ரூ.67,700-2,08,700/-
Private Secretary4ரூ.47,600-1,51,100/-
Personal Assistant4ரூ.44,900-1,42,400/-
Senior Accounts Officer1ரூ.53,100-1,67,800/-
Assistant Accounts Officer1ரூ.44,900-1,42,400/-
Legal Advisor1ரூ.1,23,100-2,15,900/-
Deputy Legal Advisor1ரூ.67,700-2,08,700/-
Junior Translator(OL)1ரூ.35,400-1,12,400/-

வயது வரம்பு :

அதிகபட்சமாக 56 வயது தாண்டி இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணிகளுக்குத்தக்கப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய :  https://caqm.nic.in/

Also Read : கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Secretary (Admin),

Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas,17th Floor,Jawahar Vyapar Bhawan,(STC Building), Tolstoy Marg,New Delhi - 110001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு 6 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு 26.11.2022 நாள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Government jobs, Jobs