எல்லையோர சாலைகள் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அதில் பொது ரிசர்வ் என்ஜினீயர் படையில் தற்போது உள்ள 1,099 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என்று 5 பிரிவுகளில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது |
Radio Mechanic | 2 | 27 |
Operator Communication | 154 | 27 |
Driver Mechanical Transport (OG) | 9 | 27 |
Vehicle Mechanic | 236 | 27 |
MSW Driller | 11 | 25 |
MSW Mason | 149 | 25 |
MSW Painter | 5 | 25 |
MSW Mess Waiter | 1 | 25 |
Operator Communication | 532 | 27+10 |
மொத்தம் | 1,099 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Radio Mechanic | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Radio Mechanic சான்றிதழ் மற்றும் 2 வருட அனுபவம் |
Operator Communication | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி,Wireless Operator or Radio Mechanic சான்றிதழ். |
Driver Mechanical Transport (OG) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஒட்டுநர் உரிமம். |
Vehicle Mechanic | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Mechanic சான்றிதழ் |
MSW Driller | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
MSW Mason | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Building construction/ BricksMason from Industrial Training Institute / Industrial Trade Certificate / National Council for Training in the Vocational Trades / State Council for Vocational Training சான்றிதழ். |
MSW Painter | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Painter சான்றிதழ் |
MSW Mess Waiter | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
Operator Communication | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, Wireless Operator or Radio Mechanic சான்றிதழ். |
மொத்தம் | 1,099 |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வுகளை விண்ணப்பதார்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். இறுதியில் தேர்வு செய்யப்படுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவர். முன்னர், விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://bro.gov.in/ என்ற இணையத்தள அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து ரூ.50 விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்
தபால் முகவரி:
o Commandant BRO School & Centre,
Dighi camp, Pune- 411 015.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு 2022 டிசம்பர் 31 ஆம் நாள் வெளியானது.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Employment news, Job vacancies