ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் : என்.எல்.சியில் 213 பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் : என்.எல்.சியில் 213 பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

என்.எல்.சி நிறுவனம்

என்.எல்.சி நிறுவனம்

Neyveli NLC india limited Recruitment : நெய்வேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமாக என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக நெய்வேலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30-ம் தேதியே கடைசி நாளாகும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்காலிப்பணியிடம்சம்பளம்
Junior Overman (Trainee)51ரூ.31,000-1,00,000/-(S1 Grade)
Junior Surveyor (Trainee)15ரூ.31,000-1,00,000/- (S1 Grade)
Sirdar (Selection Grade-I)147ரூ.26,000-1,10,000/- (SG1 Grade)

வயது வரம்பு :

S1 Grade மற்றும் SG1 Grade பணிகளுக்கு பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக உள்ளது. ஒ.பி.சி பிரிவினருக்கு 33 மற்றும் இதர பிரிவினருக்கு 35 ஆக உள்ளது.

கல்வித்தகுதி:

Junior Overman (Trainee) பணிக்கு Mining / Mining engineering பாடத்தில் டிப்ளமோ, Overman சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Junior Surveyor (Trainee) பணிக்கு Mining /Mining engineering / Mine Surveying / Civil Engineering பாடங்களில் டிப்ளமோ அல்லது Civil Engineering பாடத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் மற்றும் என்.டி.சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Sirdar (Selection Grade-I) பணிக்கு Mining Engineering பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Also Read : இஸ்ரோவில் 526 காலிப்பணியிடங்கள் - டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

Also Read : தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ரூ.71 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு www.nlcindia.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.300/- மற்றும் 250/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs