முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சுகாதார பணியில் வேலை : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சுகாதார பணியில் வேலை : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

தேசிய சுகாதார பணி

தேசிய சுகாதார பணி

TN jobs alert : தமிழக அரசின் தேசிய சுகாதார பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசின் தேசிய சுகாதார பணியில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
மாநில ஆலோசகர் - பொதுச் சுகாதாரம்8அதிகபட்சம் 45 வயதுரூ.47,500-60,000/-
சர்வர் நிர்வாகி1வயது வரம்பு இல்லைரூ.40,000/-
மென்பொருள் புரோகிராமர்3வயது வரம்பு இல்லைரூ.23,000/-
LIMS IT ஒருங்கிணைப்பாளர்-SPMU1அதிகபட்சம் 45 வயதுரூ.21,000/-
புள்ளியியல் உதவியாளர்1அதிகபட்சம் 35 வயதுரூ.28,000/-
கணக்காளர் - ஆயுஷ்1அதிகபட்சம் 35 வயதுரூ.14,000/-
உதவியாளர்4அதிகபட்சம் 35 வயதுரூ.20,000/-
உயிர் மருத்துவ பொறியியல்1அதிகபட்சம் 35 வயதுரூ.20,000/-

கல்வித்தகுதி:

மாநில ஆலோசகர் - பொதுச் சுகாதாரம்:

எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ்/ஆயுஷ் பட்டப்படிப்பு மற்றும் பாராமெடிக்கல் உடன் பொதுச் சுகாதாரத்தில் முதுகலை தேர்ச்சி தேவை. மேலும் பதவிக்கு ஏற்ற அனுபவம் தேவை.

சர்வர் நிர்வாகி:

B.E. / B.Tech / M.Tech in CS/IT), MCA , M.Sc (Computer Science /Information Technology படிப்புகளில் 4 ஆண்டுகள் டிகிரி.

மென்பொருள் புரோகிராமர்:

BE / B.Tech / M.Sc(CS / IT ) / MCA / M.Tech டிகிரி மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.

LIMS IT ஒருங்கிணைப்பாளர்-SPMU:

MCA / B.Tech / B.E (Biomedical Engineering) / MSc (Biomedical Engineering),MSc (MLT) டிகிரி மேலும் மருத்துவ ஆய்வக சேவையில் 1 வருட அனுபவம்

புள்ளியியல் உதவியாளர்:

புள்ளியியல் பிரிவில் பட்டப்படிப்பு/கணினி பயன்பாடுகள் பாடத்தில் முதுகலை பட்டம். 2 -3 ஆண்டுகள் அனுபவம்

கணக்காளர் - ஆயுஷ்:

B.Com டிகிரி தேர்ச்சி / புள்ளியியலில் B.Sc

உதவியாளர்:

ஏதேனும் ஒரு டிகிரி, கணினி அறிவு மற்றும் தட்டச்சு

உயிர் மருத்துவ பொறியியல்:

Bio Medical Engineering பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கூகுள் தேடலில் அக்னிபாத் திட்டம் முதலிடம்!

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவம் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://docs.google.com/forms/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.12.2022.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs