முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 8-வது பாஸ் ஆகியிருந்தால் போதும்... ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

8-வது பாஸ் ஆகியிருந்தால் போதும்... ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

TN job alert : அரசின் மாவட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை கீழ் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத் திட்டம் / தேசிய நகர்ப்புற நலத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்எண்ணிக்கை
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்7
துப்பரவு பணியாளர்1
MMU கிளினர்1

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்களுடன் கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் இணைத்து அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்கலாம்.

Also Read : மாவட்ட சமூக நலத்துறையில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு : உடனே விண்ணப்பியுங்கள்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,

இராமபுரம் அஞ்சல். கிருஷ்ணகிரி மாவட்டம் - 635 115.

top videos

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

    First published:

    Tags: Govt hospitals, Jobs, Tamil Nadu Government Jobs