ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.1,42,400 வரை சம்பளம்.. மத்திய அரசு பாதுகாப்புத் துறை சார்ந்த வேலை.. முழு விவரம்!

ரூ.1,42,400 வரை சம்பளம்.. மத்திய அரசு பாதுகாப்புத் துறை சார்ந்த வேலை.. முழு விவரம்!

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு

Central Govt job alert : மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் ஏரோநாட்டிக்கல் தர உத்தரவாதத்தின் பொது இயக்குநரகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
Senior Scientific Assistant(Aeronautical)230
Senior Scientific Assistant(Electrical)130
Senior Scientific Assistant(Electronics)230
Senior Scientific Assistant(Chemical)330
Senior Scientific Assistant(Computer)330
Senior Scientific Assistant(Mechanical)230
Senior Scientific Assistant(Metallurgy)330
Senior Scientific Assistant(Textile)230

சம்பளம் :

இப்பணிகளுக்குச் சம்பளமாக ரூ.44,900 முதல் 1,42,400 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அந்தந்த பணிக்கான பிரிவு சார்ந்த பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.2 லட்சம் வரை சம்பளம்... விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.upsc.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs