ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் 800 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் 800 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

Central govt job alert : மத்திய அரசின் பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் உள்ள 800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் பவர் கிர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 800 காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
  Field Engineer(Electrical)50
  Field Engineer(Electronics &Communication)15
  Field Engineer (IT)15
  Field Supervisor(Electrical)480
  Field Supervisor(Electronics &Communication)240
  மொத்தம்800

  வயது வரம்பு :

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 29 ஆக நியமிக்கப்பட்டுள்ளது.

  கல்வித்தகுதி:

  B.E/B.Tech/B.Sc electronic,communication,information technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  சம்பளம்:

  இப்பணிகளுக்கு ரூ.23,000 முதல் ரூ.1,20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் ஆனால் விண்ணப்பதார்கள் அதிகம் இருப்பில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  http://www.powergrid.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்க வேண்டும். அதனை நேர்காணல் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக Field Engineer (Electrical/E&T/IT) பணிக்கு ரூ.400/- மற்றும் Field Supervisor (Electrical/E&C) ரூ.300/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.powergrid.in/recruitment

  Also Read : ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு : மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

  முக்கிய நாட்கள்:

  ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 21.11.2022

  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.12.2022.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs