ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

தேர்வில்லாத வேலை... மத்திய அரசின் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் முறை!

பவன் ஹான்ஸ் லிமிடெட்

பவன் ஹான்ஸ் லிமிடெட்

மத்திய அரசின் கீழ் இயங்கும் பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில் பவன் ஹான்ஸ் லிமிடெட்  நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

  பணியின் விவரங்கள்:

  ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.

  பணியின் பெயர்காலி இடங்கள்
   Maintenance Supervisor (Skilled)5
  Operation Assistant (Skilled)5
  Duty Electrician/operator Semi - Skilled5
  Station Co-ordinator (Skilled)5
  RCS Co-ordinator (Skilled)1

  கல்வித்தகுதி:

  Maintenance Supervisor (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் அனுபவம் தேவை.

  Operation Assistant (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் Helliport /Airport, liasoning & co-ordination, and handling of passengers etc பிரிவுகளில் அனுபவம் தேவை.

  Duty Electrician/operator Semi - Skilled பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலெக்டிரிசன் படிப்பில் 2 வருடம் ஐடிஐ அல்லது டிப்லோமோ படித்திருக்க வேண்டும். 3 வருடம் அனுபவம் வேண்டும்.

  Station Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

  RCS Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.

  வயது வரம்பு :

  Maintenance Supervisor,Operation Assistant,Duty Electrician/operator Semi - Skilled பணிகளுக்கு விண்ணப்பிற்பதர்க்கு  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  Station Co-ordinator,RCS Co-ordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க  25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படுவர்.

  சம்பளம்: 

  ரூ. 17,446/- முதல் ரூ. 22,516/- வரை

  Also Read : IBPS SO 2022: வங்கி வேலைவாய்ப்பு.. 710 காலியிடங்கள்..! - உடனே விண்ணப்பியுங்கள்

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

  விண்ணப்பிக்க வேண்டிய தளம்: https://www.becil.com/careers

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2022.

  மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Job vacancies, Jobs