முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

டிஆர்டிவோ

டிஆர்டிவோ

DRDO CEPTAM 2022: மத்திய அரசின் பணியாளர்கள் திறமை மேலாண்மை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனிநபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாகவுள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

1,061 காலியிடங்களின் விவரங்கள்:

பணியின் பெயர்காலிபணியிடங்கள்
Junior Translation Officer (JTO)33
Stenographer Grade-I (English Typing)215
Stenographer Grade-II (English Typing)123
Administrative Assistant ‘A’(English Typing)250
Administrative Assistant ‘A’ (Hindi Typing)12
Store Assistant ‘A’ (English Typing)134
Store Assistant ‘A’ (Hindi Typing)4
Security Assistant ‘A’41
Vehicle Operator ‘A’145
Fire Engine Driver ‘A’18
Fireman86
மொத்தம்1061

வயது வரம்பு:

18 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விரிவான வயது சலுகைகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பளம் :

பணிசம்பளம்
JTO & Stenographer Grade-I (English Typing)ரூ.35,400-1,12,400
Stenographer Grade-IIரூ.25,500-81,100/-
மற்ற பணியிடங்களுக்குரூ.19,900-63,200/-

பணிக்கான கல்வித்தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Junior Translation Officer/Stenographer Grade-Iஅங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் உடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளகலைப் பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
Stenographer Grade-II/Administrative Assistant/Store Assistant/Security Assistant12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Vehicle Operator/Fire Engine Driver/Fireman10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு TIER-I (CBT) ஆன்லைன் எழுத்து தேர்வு, Tier-II (SKILL/PHYSICAL FITNESS AND CAPABILITY TEST, WHEREVER APPLICABLE) தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : அக்டோபரில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக உயர்வு!

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட DRDO இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.drdo.gov.in/ceptm-advertisement/1920

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 07.11.2022

ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் : 07.12.2022

குறிப்பு :

தேர்வு குறித்து தகவலுக்கு இணையதளத்தைத் தவறாமல் அணுக வேண்டும். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, DRDO, Jobs