ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசு மருத்துவமனையில் பல்வேறு காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம்.. இதுதான் விவரம்!

அரசு மருத்துவமனையில் பல்வேறு காலி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம்.. இதுதான் விவரம்!

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் பல்வேறு காலியிடங்களுக்கான உடனடி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ariyalur, India

  அரியலூர் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில்  பல்வேறு இடங்கள் காலியாகவுள்ளது. அதனை நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணிக்கான விவரங்கள்:

  பணியின் பெயர்ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்,ஓட்டுனர்,வார்டு உதவியாளர்,மருத்துவமனை பணியாளர்,வண்டி தள்ளுநர்,துப்புரவு பணியாளர்.
  வயது வரம்பு18 இல் இருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
  பணியிடம்அரியலூர்

  பணியின் பெயர்காலியாகவுள்ள இடங்கள்
  ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்34
  ஓட்டுனர்2
  வார்டு உதவியாளர்8
  மருத்துவமனை பணியாளர்12
  வண்டி தள்ளுநர்6
  துப்புரவு பணியாளர்19

  மருத்துவமனைப் பணிக்கான கல்வித்தகுதி:

  பணியின் பெயர்கல்வித்தகுதி
  ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  ஓட்டுனர்10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Heavy license பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுக்கள் அனுப்பவம் வேண்டும்.
  வார்டு உதவியாளர்,மருத்துவமனை பணியாளர்,வண்டி தள்ளுநர்,துப்புரவு பணியாளர்.8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  விண்ணப்பிக்கம் முறை:

  விண்ணப்பதார்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் அசலுடன் சான்றிதழ் நகல்களை இணைத்து மருத்துவமனையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  Also Read : 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  முதல்வர் அரசு அரியலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரியலூர்.

  விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.11.2022

  Published by:Janvi
  First published:

  Tags: Govt hospital, Jobs, Tamil Nadu Government Jobs