ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேலை - ரூ.60,000 வரை சம்பளம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேலை - ரூ.60,000 வரை சம்பளம்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள உள்துறை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள உள்துறை பணியிடங்களுக்குத் தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் கீழ் வருமாறு:-

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
நாதஸ்வரம்1ரூ.19,500-62,000
தவில்1ரூ.18,500-58,600
தாளம்1ரூ.18,500-58,600
சுருதி1ரூ.18,500-58,600
உதவி அர்ச்சகர் (கீழ்சாந்தி போத்தி)1ரூ.15,900-50,400
இலை விபூதிபோத்தி1ரூ.15,900-50,400

கல்வித்தகுதி:

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

இதர நிபந்தனைகள்:

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். விண்ணப்பங்களுக்குக் கட்டணம் கிடையாது.

Also Read : TRB Annual Planner 2023: 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் - தேர்வு எப்போது?

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

திருச்செந்தூர் - 628215,

தூத்துக்குடி மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04639-242221.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய :  https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/

First published:

Tags: Hindu Endorsements Dept, Jobs, Tamil Nadu Government Jobs