ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8ம் வகுப்பு தேர்ச்சியா? ஒரு நாளுக்கு ரூ.821 வரை சம்பளம்..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!

8ம் வகுப்பு தேர்ச்சியா? ஒரு நாளுக்கு ரூ.821 வரை சம்பளம்..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna university Recruitment : அண்ணா பல்கலைக்கழகத்தின் எஸ்டேட் அலுவலகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணா பல்கலைக்கழக எஸ்டேட் அலுவலகத்தில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு நாள்தோறும் ரூ.424 முதல் ரூ.821 வரை  சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடங்கள்சம்பளம்கல்வி
Junior Architect1ரூ.821B.Arch தேர்ச்சி
Draughts Person1ரூ.821B.E.(Civil) தேர்ச்சி
Draughts Person1ரூ.699Architecture / Civil பாடத்தில் டிப்ளமோ
Computer Programmer1ரூ.821B.E.(CSE/IT) தேர்ச்சி
Computer Programmer1ரூ.771M.Sc. (CSE/IT) or M.C.A தேர்ச்சி
Professional Assistant-I3ரூ.821B.E.Civil / Electrical with’C’Licence
Professional Assistant-III5ரூ.699Electrical with ’C’License / Civil / Modern Office Practice / Mechanical டிப்ளமோ
Clerical Assistant1ரூ.486ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் தட்டச்சு
Peon-cum-Line operator/Carpenter / Plumber /Electrician4ரூ.4618 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ சான்றிதழ்
Peon1ரூ.4248 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்துத் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம் 1/ விண்ணப்பம் 2.

Also Read : தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தபால் முகவரி:

The Professor & Estate Officer, Anna

University, Chennai-600 025

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : Junior Architect மற்றும் Draughts Person பதவிக்கு 13.01.2023 மாலை 5 மணி வரை. இதர பணிகளுக்கு 18.01.2023 மாலை 5 மணி வரை.

First published:

Tags: Anna University, Jobs