ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் : ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்..

மாவட்ட சுகாதாரத் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் : ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்..

மாவட்ட நலச் சங்கம்

மாவட்ட நலச் சங்கம்

TN job alert : தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச் சங்கம் மூலமாக மாவட்ட பொதுச் சுகாதாரத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச் சங்கம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்டு காலியாகவுள்ள இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்கல்வி
Dental Surgeon1ரூ.34,000BDS/சான்றிதழ்.
Urban Health Manager / Sector Health Nurse1ரூ.25,000M.Sc.Nursing/B.Sc.Nursing
Auxiliary Nurse Midwifery(ANM)2ரூ.14,00010 ஆம் வகுப்பு தேர்ச்சி/பல் துறை பயிற்சி சான்றிதழ்/சான்றிதழ்
Physiotherapist1ரூ.13,000Physiotherapist இளங்கலைப் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம்
CeMONC Security1ரூ.8,5008 ஆம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி
Pain and Palliative Care Worker1ரூ.8,5008 ஆம் வகுப்பு தேர்ச்சி
Audiometrician1ரூ.17,250DHLS 1 வருட டிப்ளமோ
Speech Therapist1ரூ.17,000DTYDHH டிப்ளமோ
Multipurpose Hospital Worker(MPHW)8ரூ.8,5008 ஆம் வகுப்பு தேர்ச்சி
Operation Theatre Assistant (Trauma care)2ரூ.11,2003 மாத OT தொழில்நுட்ப படிப்பு
Radiographer(Trumacare)2ரூ.13,300Radiography இளங்கலைப் பட்டம்
Dental Assistant1ரூ.13,80010 ஆம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து விரைவு தபால் மூலமாகவோ/நேரிலோ/மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Also Read : ஐடிஐ முதல் முதுகலை வரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்.

பெருங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி - 606 213.

மின்னஞ்சல் முகவரி : dphkkr@nic.in

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs