நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | காலிப்பணியிடம் | சம்பளம் |
Junior Overman (Trainee) | 51 | ரூ.31,000-1,00,000/-(S1 Grade) |
Junior Surveyor (Trainee) | 15 | ரூ.31,000-1,00,000/- (S1 Grade) |
Sirdar (Selection Grade-I) | 147 | ரூ.26,000-1,10,000/- (SG1 Grade) |
வயது வரம்பு :
S1 Grade மற்றும் SG1 Grade பணிகளுக்கு பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆக உள்ளது. ஒ.பி.சி பிரிவினருக்கு 33 மற்றும் இதர பிரிவினருக்கு 35 ஆக உள்ளது.
கல்வித்தகுதி:
Junior Overman (Trainee) பணிக்கு Mining / Mining engineering பாடத்தில் டிப்ளமோ, Overman சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Junior Surveyor (Trainee) பணிக்கு Mining /Mining engineering / Mine Surveying / Civil Engineering பாடங்களில் டிப்ளமோ அல்லது Civil Engineering பாடத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் மற்றும் என்.டி.சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Sirdar (Selection Grade-I) பணிக்கு Mining Engineering பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
Also Read : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு www.nlcindia.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.300/- மற்றும் 250/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://web.nlcindia.in/rec122022/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs, Neyveli, NLC