ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு...ரூ.2,16,600 வரை சம்பளம்.

மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு...ரூ.2,16,600 வரை சம்பளம்.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்

Central Govt job alert : மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தில் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் கடல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் கடல் வளங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு தகவல் இடம்பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இதில் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியின் பிரிவுபணியிடம்சம்பளம்வயது
  Scientist – FMechanical1ரூ.1,31,100 – 2,16,600 வரைஅதிகபட்சம் 50 வயது.
  ScientificAssistantMechanical1ரூ.35,400-1,12,400 வரைஅதிகபட்சம் 28 வயது.
  ScientificAssistantElectronics &Communication1ரூ.35,400-1,12,400 வரைஅதிகபட்சம் 28 வயது
  TechnicianGrade - AElectronics /Instrumentation1ரூ.19,900 - 63,200 வரைஅதிகபட்சம் 25 வயது
  Junior Translation Officer-1ரூ.35,400-1,12,400 வரைஅதிகபட்சம் 35 வயது

  கல்வித்தகுதி:

  பணியின் பெயர்தகுதி
  Scientist – FMechanical Engineering or Technology பிரிவில் இளங்கலை பட்டம். 16 ஆண்டுகள் அனுபவம்.
  Scientific AssistantMechanical Engineering பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ. 2 ஆண்டுகள் அனுபவம்.
  Scientific AssistantElectronics & Communication Engineering பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ. 2 ஆண்டுகள் அனுபவம்.
  Technician Grade - A10 ஆம் வகுப்பு தேர்ச்சி. 2 ஆண்டுகள் அனுபவம்.
  Junior Translation Officerஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி கலந்து முதுகலைப் பட்டம் அல்லது மொழிபெயர்ப்பில் டிப்ளமோ சான்றிதழ்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறமை தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். Scientist – F Mechanical பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிகளுக்குத் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.niot.res.in/niot1/recruitment.php

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

  The Director, National Institute of Ocean Technology, Velachery – Tambaram

  Main Road, Pallikaranai, Chennai – 600100.

  Also Read : மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,20,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

  முக்கிய நாட்கள்:

  நிகழ்வுகள்தேதி
  ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்19.12.2022
  தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்(நகரப் பகுதிகள்)26.12.2022.
  தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் (தொலைவு பகுதிகள்)02.02.2023.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs