முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.2,80,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. முழு விவரங்கள்

ரூ.2,80,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. முழு விவரங்கள்

குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட்

குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட்

Central Govt job alert : மத்திய அரசின் இருப்பு தாது உற்பத்தி செய்யும் நிறுவனமான குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் இருப்பு தாது உற்பத்தி செய்யும் நிறுவனமான குத்ரேமுக் அயன் ஓர் கம்பெனி லிமிடெட் ஸ்டீல் அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் முறையைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயது
Cheif General Manager1ரூ.1,20,000-2,80,000/-55 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
General Manager(Finance)1ரூ.1,20,000-2,80,000/-53 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
General Manager(Commericial)1ரூ.1,20,000-2,80,000/-53 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Deputy General Manager(Finance)1ரூ..1,20,000-2,80,000/-51 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Asst.General Manager(Electrical)2ரூ.1,00,000-2,60,000/-48 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Asst.General Manager(Minning)1ரூ. 1,00,000 - 2,60,000/-48 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்
Senior Manager(Training & Safety)2ரூ.90,000-2,40,000/-45 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Senior Manager(Commercial)1ரூ.90,000-2,40,000/-45 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Medical Superintendent1ரூ.90,000-2,40,000/-45 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Duputy Manager(Geology)1ரூ.60,000-1,80,000/-35 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Deputy Manager(Structural)1ரூ.60,000-1,80,000/-35 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.
Assistant Manager(Survey)1ரூ.50,000-1,60,000/-30 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு https://www.kioclltd.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500/- Demand draft மூலம் செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம், தேவையான சான்றிதழ் மற்றும் கட்டணம் செலுத்திய ரசீதுடன் இணைத்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.kioclltd.in/

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள்21.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள்03.12.2022
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய நாள்09.12.2022

Also Read : ரயில்வேயில் பல்வேறு காலியிடங்கள்; தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager(HR), HR department, KIOCL Limited, Koramangala 2nd Block,Sarjapur a Road,Bengaluru - 560 034.

top videos

    மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Central Government Jobs, Jobs