ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசு வேலை.. மாதம் 2,00,000 சம்பளம்..! உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு வேலை.. மாதம் 2,00,000 சம்பளம்..! உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம்

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம்

Central govt job alert : மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்களை பார்ப்போம்.

    பணியின் விவரங்கள் :

    பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்வயதுசம்பளம்
    Deputy Director(Finance & Accounts)2அதிகபட்சம் 40 வயதுரூ.67,700-2,08,700 வரை.
    EDP Assistant1அதிகபட்சம் 35 வயதுரூ.35,400-1,12,400 வரை.
    Junior HydrographicSurveyor (JHS)3அதிகபட்சம் 30 வயதுரூ. 3,5400-1,12,400 வரை.
    Stenographer - D4அதிகபட்சம் 27 வயதுரூ.25,500-81,100
    Lower Division Clerk (LDC)4அதிகபட்சம் 27 வயதுரூ.19,900-63,200

    கல்வித்தகுதி:

    அந்தந்த பிரிவுகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Stenographer - D மற்றும் Lower Division Clerk பணிகளுக்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டைபிங் தெரிந்திருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    விண்ணப்பதார்களில் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு..

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிகளுக்கு https://iwai.nic.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக SC / ST, PWD and EWS பிரிவினர் ரூ.200/- மற்றும் இதர பிரிவினர் ரூ.500/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://cdn.digialm.com//EForms

    முக்கிய நாட்கள்:

    நிகழ்வுகள்தேதிகள்
    ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் 19.11.2022.
    ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்17.12.2022

    மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Central Government Jobs, Jobs