ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள், மொழிபெயர்ப்பாளருக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள், மொழிபெயர்ப்பாளருக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

ரெப்கோ வங்கி

ரெப்கோ வங்கி

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள்,மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர் போன்றவர்களுக்கான தற்காலிகப்பணி அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்பணியிடம்
  Officer on Special Duty (OSD)- Credit2
  Officer on Special Duty (OSD) – Inspection3
  Officer on Special Duty (OSD) – IR & Vigilance1
  Temporary Translator/Typist – Hindi1
  Temporary Typist – Tamil1

  வயது வரம்பு:

  Officer on Special Duty பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 62 க்குள் இருக்க வேண்டும்.

  Temporary Translator/Typist பணிக்கான வயதானது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

  சம்பள விவரம்:

  பணியின் பெயர்சம்பளம்
  Officer on Special Dutyரூ.40,000/-  + ஒரு நாளைக்கு உணவு ரூ.220/-
  Translator / Typist Hindiரூ.20,000/-
  Translator / Typist Tamilரூ.11,000/- + ஒரு நாளைக்கு உணவு ரூ.140/-

  பணிக்கான தகுதி:

  Officer on Special Duty பணிகளுக்கு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது விஆர்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

  Translator / Typist பணிக்குப் பட்டப்படிப்பு தேர்ச்சி  மற்றும் தட்டச்சு உயர் கிரேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  பணிக்குத் தேர்வு செய்யப்படும் முறை:

  தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Translator / Typist பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

  Also Read : குரூப் 2 தேர்வர்களே... டிஎன்பிஎஸ்சி அறிவித்த முக்கிய அறிவிப்பு!

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியுள்ள விண்ணப்பதார்கள் ரெப்கோ வங்கியின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயவிவரங்களுடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்துத் தபால் மூலம் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.11.2022.

  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://www.repcobank.com/uploads/career/Application_OSD.pdf

  அறிவிப்பை பார்க்க : Notification 1 Notification 2

  Published by:Janvi
  First published:

  Tags: Bank Jobs, Banking jobs, Jobs