ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாவட்ட பொது சுகாதாரத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் இதோ..!

மாவட்ட பொது சுகாதாரத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் இதோ..!

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

TN job alert : பொது சுகாதாரப்பிரிவில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Pharmacist1ரூ.15,000
Audiologist and speech Therapist2ரூ.23,000
Physiotherapists2ரூ.13,000
Radiographer1ரூ.10,000

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அதிகபட்சம் 35 ஆக உள்ளது.

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Pharmacistபார்மசியில் இளங்கலை அல்லது முதுகலை
Audiologist and speech TherapistAudiologist and speech language pathology இளங்கலை
PhysiotherapistsPhysiotherapist இளங்கலைப் பட்டம் அல்லது டிப்ளமோ
RadiographerRadiography இளங்கலைப் பட்டம்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://virudhunagar.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து தாபல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்

Also Read : யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு ரூ.5000 நிதியுதவி - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளார், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

விருதுநகர் மாவட்டம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.12.2022 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, Virudhunagar