ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியம்

தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியம்

TN job alert :தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு கிராம வளர்ச்சி வாரியத்தில் Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Programme Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade ­III) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

    பணியின் விவரங்கள்:

    பணியின் பெயர்பணியிடம்
    Senior Scientist and Head1
    Subject Matter Specialist (Horticulture)1
    Programme Assistant (Lab Technician)1
    Assistant1
    Stenographer (Grade ­III)1

    இப்பணிக்கான வயது வரம்பு:

    பணியின் பெயர்அதிகபட்ச வயது
    Senior Scientist and Head47
    Subject Matter Specialist (Horticulture)35
    Programme Assistant (Lab Technician)30
    Assistant27
    Stenographer (Grade ­III)27

    கல்வித்தகுதி:

    பணியின் பெயர்கல்வித்தகுதி
    Senior Scientist and Headஅறிவியல் உட்பட வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    Subject Matter Specialist (Horticulture)தோட்டக்கலையில் முதுகலைப் பட்டம் அல்லது தோட்டக்கலை தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Programme Assistant (Lab Technician)வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் அல்லது விவசாயம் தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Assistantஇளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Stenographer (Grade ­III)  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பள விவரம்:

    1. Senior Scientist and Head – Pay Level 13 A

    2. Subject Matter Specialist (Horticulture) – Pay Level 10

    3. Programme Assistant (Lab Technician) – Pay Level 6

    4. Assistant – Pay Level 6

    5. Stenographer (Grade ­III) – Pay Level 4

    தேர்வு செய்யப்படும் முறை:

    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய ரசீதுடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : http://tnbrdngo.org/events/NOTI012022TNBRD.pdf

    விண்ணப்பக் கட்டணம் :

    Senior Scientist and Head மற்றும் Subject Matter பணிக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாகவும் Specialist Programme Assistant, Assistant, Stenographer பணிக்கு ரூ.300/- கட்டணமாகவும் TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI என்ற பெயருக்கு Demand Draf செலுத்த வேண்டும்.

    Also Read : தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

    விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

    THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.

    விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 22.11.2022.

    மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Jobs, Tamil Nadu Government Jobs