ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... தகுதிக்கேற்ப மத்திய அரசு வேலைவாய்ப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... தகுதிக்கேற்ப மத்திய அரசு வேலைவாய்ப்பு : விண்ணப்பிப்பது எப்படி?

மிஷ்ரா தாது நிகம் லிமிடெட்

மிஷ்ரா தாது நிகம் லிமிடெட்

Central Govt job alert : மத்திய அரசின் மிஷ்ரா தாது நிகம் லிமிடெட் என்னும் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் மிஷ்ரா தாது நிகம் லிமிடெட் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு துறை, விண்வெளி, அணு அலைகள் மற்றும் வணிக இடங்களுக்குத் தேவையான உலோகங்கள் தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Junior Staff Nurse4அதிகபட்சம் 30 வயதுரூ.19,130/-
Fireman3அதிகபட்சம் 35 வயதுரூ.19,130/-
Refractory Mason1அதிகபட்சம் 33 வயதுரூ.19,130/-
Junior Operative Trainee (JOT) -NDT Operator2அதிகபட்சம் 30 வயதுரூ.20,000/-
Junior Operative Trainee (JOT) - Fitter - Cutting Machines1அதிகபட்சம் 35 வயதுரூ.20,000/-
Junior Operative Trainee (JOT) -Turner1அதிகபட்சம் 30 வயதுரூ.20,000/-
Junior Operative Trainee (JOT) -Fitter1அதிகபட்சம் 30 வயதுரூ.20,000/-
Senior Operative Trainee (SOT) - Civil1அதிகபட்சம் 35 வயதுரூ.21,900/-
Lab Technician1அதிகபட்சம் 35 வயதுரூ.22,950/-

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்தகுதி
Junior Staff NurseB.Sc. Nursing/ GNM with Intermediate/ EMT மற்றும் 2 வருட அனுபவம் தேவை.
Fireman10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தீயணைப்பு குறித்து சான்றிதழ் படிப்பு. 4 வருட அனுபவம்
Refractory Mason10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 வருட அனுபவம்
Junior Operative Trainee (JOT) -NDT Operator10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ (Electrical or Electronics). 2 வருட அனுபவம்.
Junior Operative Trainee (JOT) - Fitter - Cutting Machines10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ (Fitter). 7 வருட அனுபவம்.
Junior Operative Trainee (JOT) -Turner10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ (Turner).2 வருட அனுபவம்.
Junior Operative Trainee (JOT) -Fitter10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ (Fitter).2 வருட அனுபவம்.
Senior Operative Trainee (SOT) - Civilசிவில் இன்ஜீனியரிங் டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம்
Lab TechnicianB.Sc. (Chemistry/ Physics) அல்லது டிப்ளமோ உலோக பொறியியலில் டிப்ளமோ. 3 வருட அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத் தேர்வு முடிவுக்குப் பின்பு பணி நியமனம் வழங்கப்படும்.

Also Read : இந்தியக் கடற்படையில் அக்னிபாத் திட்டம்..1400 அக்னிவீரர்களுக்கான காலிப்பணியிடங்கள்..விவரங்கள் இதோ..!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் https://midhani-india.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://erecruit.ap.nic.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs