ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு மாவட்ட பொதுச் சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள்...

தமிழ்நாடு மாவட்ட பொதுச் சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்கள்...

தமிழ்நாடு மாவட்ட நலச்சங்கம்

தமிழ்நாடு மாவட்ட நலச்சங்கம்

TN job alert : தமிழ்நாடு மாவட்ட பொதுச் சுகாதாரம் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலச்சங்கம் வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு மாவட்ட பொதுச் சுகாதாரம் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம் வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான செய்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்கல்வித்தகுதி
  செவிலியர்810 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 மாதங்கள் துணை செவிலியர் பயிற்சி அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 2 ஆண்டுகள் துணை செவிலியர் பயிற்சி.
  வட்டார கணக்கு உதவியாளர்1இளங்கலை வணிகவியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Tally சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்2எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

  சம்பளம்:

  இப்பணிகளுக்குத் தேசிய நலகுழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  விண்ணப்பதார்கள் தகுதியான சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் இணைத்துக் கையொப்பமிட்ட விண்ணப்பங்களை ரூ.10 தபால் தலை ஒட்டி தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  Also Read : ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

  தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

  பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை துணை இயக்குநர்.

  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

  மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில், நாகப்பட்டினம் - 6110003 தொடர்புக்கு - 04365 253036.

  தாபல் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022 மாலை 5.00 மணி வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs