ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு கிடையாது : சென்னை பெருநகர போக்குவரத்து குழுமத்தில் பல்வேறு காலியிடங்கள்!

தேர்வு கிடையாது : சென்னை பெருநகர போக்குவரத்து குழுமத்தில் பல்வேறு காலியிடங்கள்!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்

TN job alert : சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக அடிப்படை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடம்
  Procurement Expert1
  Mobility and Spatial Data Development1
  Architect1
  Human Resource Executive1
  Communication Expert1
  Environmental Specialist1
  Civil Engineer with CAD & GIS1

  கல்வித்தகுதி:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்குத் தகுதியான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  இதர விவரங்கள்:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம், உங்களில் சுய விவரங்கள் கொண்ட படிவம், போர்ட்ஃபோலியோ மற்றும் 3 மாதங்களுக்கான ஊதிய சீட்டு போன்றவற்றை அறிவிப்பில் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தமிழக பொது சுகாதாரத் துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..!

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் இணைத்து cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

  மேலும் விவரங்களுக்கு http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

  இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022 

  அறிவிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Transport