செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் ஆதரவு ஊழியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 06.03.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Medical Officer | 10 | ரூ.60,000 |
Staff Nurse | 10 | ரூ.18,000 |
MPHW | 10 | ரூ.14,000 |
Support Staff | 10 | ரூ.8,500 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Medical Officer | MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Staff Nurse | GNM/B.Sc., Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
MPHW | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/2 ஆண்டுகள் Multi Purpose Health worker/Health Inspector/Sanitary Inspector Course training பெற்றிருக்க வேண்டும். |
Support Staff | எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.03.2023 மாலை 5 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.