முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / மத்திய அரசு கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு பணிகள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

மத்திய அரசு கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு பணிகள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

வாரணாசி கண்டோன்மென்ட் போர்டு

வாரணாசி கண்டோன்மென்ட் போர்டு

Varanasi Cantonment Board recruitment : மத்திய அரசின் வாரணாசி கண்டோன்மென்ட் போர்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வாரணாசி கண்டோன்மென்ட் போர்டில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Junior Clerk1ரூ.19,900-63,200
Assistant Teacher2ரூ.35,400-1,12,400
Midwife1ரூ.21,700-69,100
Pump Attendant1ரூ.19,900-63,200
Electrician1ரூ.19,900-63,200
Ward Boy1ரூ.18,000-56,900
Assistant Sanitary Inspector1ரூ.19,900-63,200
Medical Officer1ரூ.56,100-1,77,500

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 21 முதல் 30 இருக்க வேண்டும். Medical Officer பணிக்கு 23 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Junior Clerk12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சிசிசி சான்றிதழ்
Assistant Teacherஇளங்கலைப் பட்டம், 2 வருட BTC & B.Ed மற்றும் TET தேர்ச்சி
Midwife12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ANM 2 வருடப் படிப்பு மற்றும் 6 மாத பயிற்சி சான்றிதழ்
Pump Attendant10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ சான்றிதழ் மற்றும் 1 வருட அனுபவம்
Electrician10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஐடிஐ சான்றிதழ் மற்றும் 1 வருட அனுபவம்
Ward Boy10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1 வருட அனுபவம்
Assistant Sanitary Inspector12 ஆம் வகுப்பு தேர்ச்சி, சிசிசி சான்றிதழ், தட்டச்சு மற்றும் 2 வருட அனுபவம்.
Medical Officerஎம்.பி.பி.எஸ் மற்றும் 3 வருட அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேர்காணல் கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

Also Read : ரயில்வே ஐடி துறையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://varanasi.cantt.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://iforms.mponline.gov.in/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs