2022, ஜுலை 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் முப்படைகளில் 1,35,891 இடங்கள் நிரப்பப்படமால் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று முடக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு முகாமை இந்திய ராணுவம் நிறுத்தியது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இந்த நிறுத்தம் தொடர்ந்தது. 2021 மாத நிலவரப்படி, இந்திய ராணுவத்தில் 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக இருந்தன. நாட்டின் எல்லைக் கோட்டு பகுதிகளில், பல்வேறு முனைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இந்தியப் படையினருக்கு உள்ளது. எனவே, பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்குவது முக்கியமானது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்ததனர்.
இந்த நிலையில் தான், முப்படைகளில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் “அக்னிபத்” என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், 4 ஆண்டு காலத்திற்கு மட்டும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பணி காலம் நிறைவடைந்ததும், 25% வீரர்கள் மட்டும் நிரந்தர சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் இதர வீரர்கள் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு நிதி வழங்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
இதையும் வாசிக்க: 2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கூகுள் தேடலில் அக்னிபாத் திட்டம் முதலிடம்!
இந்நிலையில், வீரர்களின் பற்றாக்குறை குறித்து சதீஸ்கர் காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் தீபக் பாஜி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பத், " வீரர்கள் மட்டத்தைப் பொறுத்த வரையில், இந்திய ராணுவத்தில் 1,18,485 இடங்களும், விமானப்படையில் 5819 பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11587 வீரர்கள் இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: எஸ்எஸ்சி 4500 காலியிடங்கள்: இரண்டே மாதங்களில் தேர்வை கிராக் செய்வது எப்படி?
மேலும், இந்த ஆண்டு 46,000 அக்னிவீரர்களை பணியில் சேர்ப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆட்சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.