ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோவை பெண்கள் தனிச்சிறையில் வேலை... தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை பெண்கள் தனிச்சிறையில் வேலை... தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

Coimbatore District Job alert: இப்பணியிடத்திற்கு 01.09.2022 அன்றைய தேதியில் 37 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்பத்தூர் பெண்கள் தனிச்சிறையில் காலியாகவுள்ள ஒர் சமூகவியல் வல்லுநர் (Social Case Work Experts) பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடத்திற்கு General Turn இன சுழற்சி உள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

இப்பணியிடத்திற்கு Any other Degree with diploma or Graduate or Post Graduate Degree in Social Work or Social Service or Social Science or Criminology or Sociology or Andragogy (Adult Education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கு 01.09.2022 அன்றைய தேதியில் 37 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட கல்வி சான்றுகள், சாதிச் சான்று மற்றும் அனுபவ சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, கோவை 18 என்ற முகவரியிட்டு 09.12.2022 க்குள் கோவை பெண்கள் தனிச்சிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இதையும் வாசிக்க: 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி.. சம்பளம் என்ன, யாருக்கு முன்னுரிமை?

மேற்கண்ட பணியிடத்தினை நிரப்புவதற்கான நேர்முக தேர்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

கோவை, பெண்கள் தனிச்சிறை, சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

First published: